மே 12-ம்தேதி முதல் அரியானா மாநிலம் மனேசரில் உற்பத்தியை மீண்டும் தொடங்கப்போவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. மே 17-ம்தேதி முதல் நாட்டில் பொது முடக்கம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீபத்தில் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
அதன் அடிப்படையில் அரியானா மாநிலம் மனேசர் தொழிற்சாலையில் உற்பத்தியை மீண்டும் தொடங்கப்போவதாக மாருதி சுசுகி அறிவித்திருக்கிறது.
அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் தொழிற்சாலையின் அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும் என்று மாருதி சுசுகி உறுதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'மே 12-ம்தேதி முதல் அரியானா மாநிலம் மனேசரில் மாருதி சுசுகி இந்தியா தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கவுள்ளது. அனைத்து செயல்பாடுகளும், அரசு காட்டிய வழிமுறையின் அடிப்படையில் கடைபிடிக்கப்படும். மேலும், தொழிலாளர் நலனின் நிறுவனம் அதிக அக்கறை செலுத்தும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து எந்தவொரு விற்பனையும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக ஆட்டோ மொபைல் துறை முழுவதும் ஆட்டம் கண்டுள்ளன.