ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றிரவு 9 மணிவரையில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 224 ஆக இருந்தது.
இதேபோன்று உலக அளவிலான பலி எண்ணிக்கையும் 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது. அமெரிக்கா மற்ற நாடுகளை விட அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்நாட்டில், 78 ஆயிரத்து 600 பேர் பலியாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 31 ஆயிரத்து 662 மற்றும் 30 ஆயிரத்து 395 ஆக பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன.
உலக அளவில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 698 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது அமெரிக்காவில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 534 ஆக உள்ளது.