ஊரடங்கில் மக்களுக்கு உதவ அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனையுடன் அனுமதி

கொரோனா பாதிப்பு - அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உதவ நிபந்தனையுடன் அனுமதி:


திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல அனுமதி.


விநியோகிக்கும் முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.


48 மணி நேரத்திற்கு முன்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.


தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்ய தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது.


நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடு என தமிழக அரசு விளக்கம் அளித்தது.


போதிய முன்னெச்சரிக்கையுடன் நிவாரண உதவி வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தல்.