இவர்களுக்கு கொரோனா வராதா

இவர்களுக்கு கொரோனா வராதா?.. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள்.


ஊரடங்கு நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 1267 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,15 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என போலீசார் தொடர்ந்து கூறி வருகின்றனர்.அப்படி வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்குபதிவும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.கண்டிப்பாக அவர் வேறு இடத்தில் இருந்து அங்கு வந்துதான் தினமும் இந்த பணிகளை செய்து வருகின்றனர்.ஊரடங்கு நேரத்தில்  இதை மட்டும் போலீசார் எப்படி அனுமதிக்கிறார்கள் ? ஆளும் கட்சி அரசு என்றால் விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதிக்கலமா ? அந்த தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாதா  ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.