ஊரடங்கை மீறியதாக மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் : தமிழக காவல்துறை

ஊரடங்கை மீறியதாக மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வாகனங்கள் ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்படும். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும். வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.