கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா: பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387-ஆக உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 6 நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது.