தொழில் நண்பன் இதழ் தமிழில் வெளிவரும் இதழ்களில் தனித்துவமான முன்னணி தொழில் மாத இதழ். இளைஞர், மாணவர்கள்,பெண்கள், தொழில் முனைவோர்கள் புதிய தொழில் தொடங்க ஆர்வம் உள்ள பலருக்கும் உற்ற நண்பனாக விளங்குகிறது .
அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்கவர் நண்பனாக வெளிவந்து கொண்டிருக்கும் தொழில் நண்பன் மாத இதழ் சென்னை முதல் குமரி வரை உள்ள அனைத்து பகுதிகளிளும், அனைத்து அரசு மற்றும் தனியார் நூலகங்களிலும், ஆயிரக்கணக்கான சந்தாதாரர்களிலுடம் சென்றடைகிறது.
தன்னம்பிக்கை கட்டுரைகள், தொழிலில் வெற்றி பெற்ற சாதனையாளர்களின் நேர்காணல்கள், சிறு, குறு, நடுத்தர, நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள், உதவிகள், மானியங்கள், புதிய தொழில் நுட்பங்கள் சார்ந்த கட்டுரைகள், வங்கிகளில் கடன் பெற்று தொழில் துவங்கும் வழிமுறைகள், அனைத்து தொழில் துறை சார்ந்த தொழில் வணிக செய்திகளை தொழில் நண்பன் இதழில் வெளியிட்டு வருகிறோம்.
சுற்றுச்சூழல் இயற்கை வேளாண்மை குறைந்த முதலீட்டில் லாபம் தரும் மண்ணுக்கேற்ற விவசாய முறைகள் ஒருங்கிணைந்த பண்ணை செய்திகளும் தொழில் நண்பன் இதில் இடம் பெறுகின்றன.