போக்குவரத்துக் காவலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு லாரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஆண்டுக்கு ரூ.48,000 கோடியை லஞ்சமாக அளிக்கிறார்களாம்
போக்குவரத்து மற்றும் வரித்துறைக்கு அளிக்கும் கட்டணத் தொகைகள் தவிர்த்து, லஞ்சமாக மட்டும் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் கொடுக்கும் பணம் 48 ஆயிரம் கோடி என்பது சேவ்லைஃப் அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லாப நோக்கற்ற அமைப்பான சேவ்லைஃப் அறக்கட்டளை நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து இருநூறு லாரி ஓட்டுநர்கள் மற்றும் 110 லாரி உரிமையாளர்களிடம் நடத்திய ஆய்வில், 82% பேர் சாலைப் பயணத்தின் போது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்