ஒரு விற்பனையைச் செய்து முடிக்கும்முன் மனக்கோட்டை கட்டாதீர்கள். இது உங்கள் கவனத்தைச் சிதறச் செய்வதோடு, விற்பனை எதிர்பார்த்த பலனை அளிக்காவிடில் மனச்சோர்வையும் உருவாக்கும். நேற்று சந்தை இருந்தது போல் இன்றும், இன்று இருப்பது போல் நாளையும் இருக்கவே இருக்காது.
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்திற்கும், புதுப்புதுப் உத்திகளைக் கையாள்வதற்கும் தயார் நிலையில் இருங்கள். ஒவ்வொரு நாள் பங்குச் சந்தை மேலும் கீழும் அதிகம் ஊசலாடும். பங்கின் விலைகள் அடிக்கடி ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும். பரபரப்பு மிகுதியாக இருக்கும். மற்றொரு நாளிலோ சந்தை மிக மந்தமாக இருக்கும்.
ஒவ்வொரு பங்கிற்கும் 'ஸ்டாப் லாஸ்' என்று ஒன்று உண்டு. அதை மறைக்காமல் இருங்கள், விலை சரிகையில் அது அடி வரை சென்று விழும் வரை காத்திருக்காதீர்கள், 'ஸ்டாப் லாஸ்' கோட்டை அது தொடுகையில் விற்றுவிடுங்கள். சந்தையின் போக்கினைக் கண்டு பீதி அடையாமல் இருப்பதும் மிக முக்கியம்.
பங்குச் சந்தையில் ஈடுபட, மனத்திண்மையும் கட்டுப்பாடும் கூட அவசியம். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பதுதான் சந்தையின் வழக்கம் எனினும், அதிலும் கவனமாக செயல்பட வேண்டும். 'பேராசை பெரும் நட்டம்' என்பது பங்குச்சந்தைக்கும் பொருந்தக் கூடியதே.
மறக்கக் கூடாத சில குறிப்புகள் :
எல்லோரும் வாங்கும் பொழுது விற்பனை செய்யவும் எல்லாரும் விற்கும்பொழுது வாங்கவும் கற்றுக்கொள்ளுங்கள். இது படிக்கும்பொழுது எளிதாகத் தோன்றலாம். ஆனால் செயல்படுத்துவது கடினம். சந்தையில் எதிர்நீச்சல் அடிக்க இக்கொள்கை உதவும். எல்லோரும் ஒரு பங்கில் ஆர்வம் செலுத்தி வாங்குகையில் அப்பங்கின் விலை அதிகரிக்கும். அப்பொழுது உங்கள் கையில் அப்பங்குகள் இருப்பின் விற்றுவிடுங்கள். அதே போல், பங்குச்சந்தை கரடிப்போக்கில் இருக்கையில் மக்கள் பீதியடைந்து விற்பார்கள். உண்மையில் அப்பங்குகள் நல்ல பங்குகளாக இருக்கலாம். ஆனால் கரடிப்போக்கின் பொழுது குறைந்த விலையில் பங்குகள் கிடைக்கும் அப்பொழுது வாங்கிப் போடுங்கள், லாபம் பெறும் வழி இதுவே.
பென்னி ஸ்டோக் எனப்படும், முன்பின் தெரியாத சிறிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள். மேலும் ஒரு பங்கின் பழைய வானம் வரலாற்றை, பழைய செயல்பாட்டை நம்பி அதை வாங்காதீர்கள் அகன் எதிர்காலக்கைக் கரிக்க கணிப்புகளின் அடிப்படையிலேயே பங்குகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
பங்குச் சந்தை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம்.
தொடரும்